கடப்பா வானூர்தி நிலையம்
ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள வானூர்தி நிலையம்கடப்பா வானூர்தி நிலையம் (ஐஏடிஏ: CDP, ஐசிஏஓ: VOCP) என்பது உள்நாட்டு வானூர்தி நிலையம் ஆகும். இது ஆந்திரப் பிரதேசம் மேற்கு கடப்பா பகுதியில் 12 கி.மீ. (7.5 மைல்) தொலைவில் அமைந்துள்ளது. இந்த விமான நிலையம் 669.5 ஏக்கர்கள் (270.9 ha) பரப்பில் ரூ. 42 கோடி.செலவில் மேம்படுத்தப்பட்ட விமான நிலையமாகும். இதை இந்திய பொது விமான போக்குவரத்து அமைச்சர் அசோக் கஜபதி ராஜு 7 ஜூன் 2015 அன்று திறந்து வைத்தார். விமான நிலைய முனையக் கட்டிடம் ஒரு நேரத்தில் 100 பயணிகளைக் கையாளும் திறனைக் கொண்டுள்ளது. மேலும் ஏப்ரனில் இரண்டு ஏடிஆர் -72 வகை விமானங்களுக்கு இடமளிக்க முடியும்.
Read article
